துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் கனமழை பெய்த்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Inebolu பகுதியில் ஓடை ஒன்றில் சீறிப்பாயும் வெள்ளத்தில் பாலம் ஓன்று அடித்து செல்லப்பட்டது.சாலைஒரத்தில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தன.
இதுவரை 3 மாகாணங்களில் இருந்து 235பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை நீடிக்கும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.