ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் மேல் ஆடையின்றி குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை ஜி7 நாடுகளின் தலைவர்கள் கேலி செய்துள்ளனர்.
ஜி7 உச்சிமாநாட்டின்போது மற்ற தலைவர்கள் மத்தியில் நாம் ஆடைகளை கழற்றலாமா, புடினை விட நாம் அனைவரும் கடினமானவர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அதற்கு ஜஸ்டின் ட்ருடோ திறந்த மார்புடன் குதிரை சவாரி செய்யும் காட்சியை காணப் போகிறோம் என்று கேலி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த தி ஹில் பத்திரிகை தெரிவித்துள்ளது.