ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கைவிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ஜூலை ஒன்றாம் தேதி போட்டி தொடங்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. துணை கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் எனக் கூறப்படுகிறது.