சென்னை அடுத்த மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகனம் பார்க்கிங் தொடர்பாக தகராறில் பெண் ஒருவரும் ஆணும் தாக்கிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
பத்மாவதி நகர் பகுதியில் வசிக்கும் மோகன், நித்யா ஆகியோர் வாகனங்களை நிறுத்த குடியிருப்பில் தனிதனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நித்யாவின் இடத்தில் மோகனுக்கு தெரிந்த நபர் வாகனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி நித்யா கேட்க சென்றபோது, மோகன் கதவை வேகமாக திறந்ததில் அவரது தாயார் காயமடைந்ததாகவும், அதற்கு நித்யா தான் காரணமென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டு, காலணியை வீசி தாக்கிக்கொண்டனர்.