திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான பணிச்சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம், தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். பொருத்தமற்ற பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதையும் புதிய விதிகள் தடை செய்கின்றன.
அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு ஆளாகாமல் குழந்தைகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.