ஆப்கானிஸ்தான் தலைநகரில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் டெல்லி திரும்பினர். இந்நிலையில், இந்திய தொழில்நுட்பக்குழுவினர் காபூல் சென்றதன் மூலம் அங்குள்ள தூதரகம் செயல்பட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடவதை கண்காணிக்கவும், அதனை ஒருங்கிணைக்கவும் இந்திய குழு காபூல் சென்றதாக குறிப்பிட்டுள்ளது.