மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஒத்துக்கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும்போது அந்த எண்ணிக்கை மாறும் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை வரும்போது, கட்சி தலைமை மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்பாக உண்மையான சோதனையை எதிர்கொள்வார்கள் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.