சென்னை மதுரவாயல் பகுதியில் ஆன்லைனில் பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது களரி மாஸ்டர் ஒருவர் வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மைலாப்பூரை சேர்ந்த கிரிதரன் மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் தான் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் இருந்தபடி ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற மதுரவாயல் போலீசார் கிரிதரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.