நைஜீரியாவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் இரும்பு ஆணிகளை கொண்டு அற்புத ஓவியங்களை உருவாக்கி வருகிறார்.
அண்மையில் இவர் நைஜீரியாவின் புகழ்பெற்ற காமெடி நடிகரின் ஓவியத்தை மொத்தம் 55 ஆயிரம் ஆணிகளை கொண்டு உருவாக்கியுள்ளார்.
இவரது ஓவியங்கள் 700 டாலருக்கு மேல் அதன் வடிவம் மற்றும் அளவை வைத்து விலைப்போகின்றன. ஒரு ஆணி ஓவியத்தை உருவாக்க 3 மாதங்கள் வரை ஆகும் என்று அந்த இளைஞர் கூறுகிறார்.