நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதைக் கண்டித்து ஐதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்த போது, ஆவேசமடைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சௌத்ரி, சீருடை அணிந்த காவலர் ஒருவரின் சட்டைக்காலரை பிடித்து இழுத்தார்.
அருகில் இருந்த பெண் காவலர்கள், ரேணுகா சௌத்ரியை போராடி இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது.
பெங்களூருவில் போராட்டம் நடத்திய கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.