வெளிநாட்டு பரிவர்த்தனை தொடர்பாக எம்.ஜி.எம் குழுமம் மோசடி செய்ததாக ஆக்சிஸ் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த வங்கி உதவித் தலைவர் ரங்கா பிரசாத் அளித்த புகாரில், எம்.ஜி.எம் குழும நிறுவனங்களுள் ஒன்றான எஸ்.ஏ.எப்.எல் நிறுவனம் தங்கள் வங்கி பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களின்றி முறைகேடாக பரிவர்த்தனை நிகழ்த்தியிருப்பதும் கண்டறியப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.எம். நிறுவனம், அவர்களின் சிங்கப்பூர், பிரிட்டனில் இயங்கும் 3 நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பல சலுகைகளை பெற்றதாகவும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.