குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வரும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ,சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
அப்போது எதிர்க்கட்சிகள் பரிந்துரை செய்யும் வேட்பாளரின் பெயர்களைத் தெரிவிக்குமாறு ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டதாகவும் முதலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வேட்பாளரை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 17 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சியினரை ஒன்று திரட்டி ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை நிறுத்துவதற்கான பொறுப்பை சோனியா காந்தி தமக்கு அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.