ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானமும் நடுவானில் மோத இருந்து விபத்து விமானிகளின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், துருக்கி வான்பரப்பின் மேல் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, 35 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்லுமாறு அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. 15 மைல் தொலைவில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் பறப்பதை அறிந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள், 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் எழும்ப மறுத்து விட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.