செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Jun 15, 2022 02:48:47 PM

5ஜி வலையமைப்புச் சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தத் தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவையை விடப் பத்து மடங்கு வேகமாகச் செயல்படும் திறனுள்ள 5ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே 5ஜி வலையமைப்புக்கான கருவிகளை நிறுவிச் சோதனை நடத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதற்கான ஏலத்தை ஜூலை இறுதிக்குள் நடத்தத் தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. அதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனங்களுக்கு உடனடியாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும்.

இதையடுத்துப் பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் விரைவில் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை இப்போதுள்ள 4ஜி சேவையைவிடப் பத்துமடங்கு வேகத்துடன் செயல்படும் திறனுள்ளது எனக் கூறப்படுகிறது.

5ஜி சேவைகள் புதிய வணிக வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் எனச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனங்கள் தொகையை ஒரேமுறையில் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை என்றும், 20 ஆண்டுத் தவணைகளாகச் செலுத்தலாம் என்றும், வங்கி உத்தரவாதம் தேவையில்லை என்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


Advertisement
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்
புதிய குழிகளை தோண்ட தடை விதித்தும் கேட்காத ஒப்பந்த பணியாளர்கள்..? வீடியோ எடுத்த செய்தியாளருக்கு பகிரங்க மிரட்டல்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
இந்தியா உடனான நட்பு இஸ்ரேலுக்கு கிடைத்த வரம்.. ஐ.நா. மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு புகழாரம்

Advertisement
Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement