சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ரக மின்சார பேருந்துகளை ஸ்விச் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனமும், அசோக் லேலாண்ட் நிறுவனமும் இணைந்து சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
நாட்டிலேயே முதன்முறையாக Eiv 12 low floor மற்றும் Eiv 12 standard என்ற இருவகையான பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின்சார பேருந்துகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பேட்டரிகளை ஒன்றரை மணிநேரத்தில் இருந்து 3 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். 12 மீட்டர் நீளமும் 2.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பேருந்துகளில் 45 பேர் அமர்ந்து பயணிக்கலாம்