வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த நிலையில் மீண்டும் ஒரு சிறிய அளவிலான எறிகணையை சோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா கடலில் எறிகணையை வெடிக்க வைத்து சோதனை செய்ததாகவும், அது சென்ற பாதைகளை கண்டறிந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், வடகொரியா மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தென் கொரியா ராணுவம் தயார் நிலையை பேணி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.