மனிதர்களை போலவே ரோபோக்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர்களான ஜப்பான் விஞ்ஞானிகள் தற்போது ஒரு படி மேலே போய் ரோபோ மனிதனின் விரலில் உயிருள்ள நிஜ மனித தோலை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
மனிதர்களை போலவே தோற்றம், புரிந்துக்கொள்ளும் திறன், அசைவுகள், உணர்திறன் போன்றவற்றை ரோபோக்களிடம் அதிகரிக்கும் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் மனித நரம்புகள், இரத்தக் குழாய்கள் போன்றவற்றையும் ரோபோக்களில் பொருத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.