இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எய்ட்ஸ் நோயை 2030 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து சவால் மிகுந்ததாகவே உள்ளதாக ஐ.நா.வுக்கான நிரந்தர துணை பிரதிநிதியான இந்திய துாதர் ஆர். ரவிந்திரா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் நடைப்பெற்ற எய்ட்ஸ் சம்பந்தமான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.