ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.
மேலும், நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க பேசியிருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.