மகாராஷ்டிராவில் 105 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது தேசத்திற்கு பெருமை அளிக்கும் தருணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமராவதி - அலோகா இடையிலான 53வது தேசிய நெடுஞ்சாலையில் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 800 ஊழியர்களும், தனியார் நிறுவனத்தை சேர்ந்த 720 பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கட்காரி தெரிவித்துள்ளார்.