தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பெரு உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன.
இந்நிலையில், தலைநகர் லிமாவில் ஒன்றிணைந்த மக்கள், அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகுமாறு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.