பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது.
அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.
லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட நுற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை சுமந்தும் ஊர்வலமாக சென்றனர்.