வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது. மின்னணு இயந்திரங்களை அவர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு வெளிநாட்டில் வாழும் குடிமக்களும் வாக்களிக்க தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தது. இதனை ரத்து செய்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தலை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக பாகிஸ்தானின் புதிய அரசு விளக்கம் அளித்துள்ளது.