சீனாவின் வர்த்த தலைநகரான ஷாங்காயில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு நீடிக்கப்படுவதால், தெருக்களில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
அந்நாட்டில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஷாங்காயில் கணிசமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு, பல வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளன.