நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro-வை சந்தைப்படுத்த உள்ளது.
ஓ.எஸ்.2 மென்பொருளுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதிய ரக ஸ்கூட்டர்களை பிரத்யேக இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.