அனைத்து இந்திய மொழிகளையும் இந்தியத் தன்மையின் ஆன்மாவாகக் கருதுவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்துக்கான இணைப்பாக மொழிகள் விளங்குவதாகவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கவும், போற்றவும், மொழிப் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் கடமைப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளதற்குத் தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்துள்ளார்.