சென்னை ஆர்.கே.நகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா மற்றும் புகையிலையினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொருக்குப்பேட்டை எழில் நகர் சர்வீஸ் சாலை அருகே ஆர்கே நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு ஷேர் ஆட்டோவில் இருந்து மூட்டை மூட்டையாக பொருட்கள் இறங்கி கொண்டிருந்தை பார்த்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட பாக்கு வகைகள் மற்றும் அன்ஸ் புகையிலை இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 5பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.