ஹாலிவுட்டின் வசூல் நட்சத்திரமான டாம் க்ரூஸ் பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு தமது படக்குழுவினருடன் வருகை தந்தார்.
அவருடைய புதிய டாப் கன் மெவரிக் திரைப்படம் இந்த விழாவில் சிறப்புப் பிரிவில் திரையிடப்படுகிறது.எட்டு சிறியரக விமானங்கள் வட்டமிட பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் நீலப்புகை வீச படக்குழுவினர் வந்து இறங்கினர்.
முன்னதாக ஆயிரம் பேர் அமரக்கூடிய திரையரங்கில் டாம் க்ரூசின் நீண்ட கால ஜனரஞ்சக திரைப்பட சாதனையை விளக்கும் வகையில் விழா இயக்குனர் தியரி ஃப்ரீமாக்ஸ் அறிமுக உரையுடன் அவர் படங்களின் 13 நிமிட கிளிப் ஒன்றும் திரையிடப்பட்டது.