பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள நிறையப் பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன என்பதைப் பற்றி நாட்டு மக்களுக்கு தமது இன்றைய உரையில் விளக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் வாரம் நிதித் தேவைகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விரைவில் எரிவாயு விநியோகம் தொடங்கும் என்றும் ரணில் கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய ரணில், உணவு, மருந்து, உரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உதவுவதாக இரு பன்னாட்டு நிதியமைப்புகளும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.