கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் கிம் ஜான் உன், கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் எல்லைகளிலும் வான்வழி மற்றும் கடல்வழி முனையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.