வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா என்பதற்கான தொல்லியல் ஆய்வு தொடங்கியது.
1669 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கியான்வாபி மசூதிக்குள் இந்து கோவிலின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஔரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் காசி விஸ்வநாதர் கோவிலின் நீட்சியாகவே கருதப்படுகிறது.
சிவனின் நந்தி சிலை , மலர் அபிசேக சித்திரங்கள் உள்ளிட்டவை காணப்படுவதையடுத்து இந்து அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இது குறித்த ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மசூதிக்குள் ஆய்வு செய்வதைத் தடுப்போரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 17 ஆம் தேதி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆய்வு தொடங்கப்பட்டதையடுத்து வாரணாசி நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.