PFI எனப்படும் இந்திய பாபுலர் முன்னணி மற்றும் இந்திய சோசலிச ஜனநாயக கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன்முறை போன்ற தீவிரமான குற்றங்களை இந்த இயக்கங்கள் செய்து வரும் போதும் அவை தடை செய்யப்படவில்லை என்று நீதிபதி கே.ஹரிபால் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித்தின் மனைவி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இக்கொலை வழக்கில் PFI & SDPI அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.