பிரான்ஸ் நாட்டில் விலங்குகளின் கழிவுகளை எருவாக்கி, அதில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோமெத்தனால் எரிபொருளை பயன்படுத்தி வேகமாக ஓடும் காரை தனியார் பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இதற்காக ரெனால்ட் ஸோய் காரை அவர்கள் சற்றே மாற்றியமைத்து அதில் ஒரு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மற்றும் எரிபொருள் டேங்கையும் பொருத்தியுள்ளனர்.
எரிபொருள் டேங்கில் ஊற்றப்பட்டுள்ள 200 லிட்டர் அளவுள்ள திரவ பயோமெத்தனாலில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு காரை ஓடச்செய்கிறது.
அந்த காரில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை 3 நாட்களுக்கு அந்த குழுவினர் பயணம் செய்துள்ளனர்.