செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆந்திரக் கடற்பகுதியில் புயல்… கடலோரப் பகுதிகளில் கனமழை... சீற்றத்துடன் எழும் அலைகள்

May 11, 2022 08:03:32 PM

ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசானி புயல் வடக்கு நோக்கியும் அதன்பின் வடகிழக்குத் திசையிலும் நகர்ந்து நாளைக் காலைக்குள் வலுவிழக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. புயலின் எதிரொலியாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலவரப்படி ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்குத் தெற்கு, தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு மத்திய வங்கக் கடலில் அசானி புயல் நிலவியது. இது அடுத்த சில மணி நேரங்களுக்கு வடக்கு நோக்கியும், அதன்பிறகு நரசாபூர், ஏனாம், காக்கிநாடா, துனி, விசாகப்பட்டினம் கடற்கரைக்கு இணையாக வடகிழக்கு நோக்கியும் நகர்ந்து இன்றிரவு வடக்கு ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

புயல் படிப்படியாக வலுவிழந்து நாளைக் காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடலோர ஆந்திரம், ஒடிசாவின் தென்கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

புயலின் காரணமாகக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில் ஆந்திரத்தின் சிறீகாக்குளம் சுன்னாப்பள்ளி கடற்பகுதியில் நேற்று ஒரு சப்பரம் கரை ஒதுங்கியது. இதை அப்பகுதிமக்கள் மீட்டுக் கரைசேர்த்துவிட்டு உளவுத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். வங்கக்கடலோர நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து இது இழுத்துவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிது.

 

ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசனி புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் எழுகின்றன.

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சீற்றத்துடன் அலைகள் எழும்புவதால் உப்படா கடற்கரைச் சாலை மூடப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் ஆட்கள், வாகனங்கள் செல்வதைத் தடுக்க 2 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புயலின் எதிரொலியாக விசாகப்பட்டினத்தில் இண்டிகோ நிறுவனத்தின் 22 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் விசாகப்பட்டினத்துக்குச் செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா - விசாகப்பட்டினம் இடையான விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 


Advertisement
தனியார் கல்வி அறக்கட்டளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி
தமிழகத்தில் அக்.6, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு
தஞ்சையில் ரவுடி 4 பேர் கும்பலால் ஓட ஓட விரட்டிக் வெட்டிக் கொலை
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்
சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்


Advertisement