சென்னை மயிலாப்பூரில் கொல்லப்பட்ட தொழிலதிபர் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியை புதைத்த பண்ணை வீட்டின் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ச்சி வைத்ததை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தம்பதியரை தேடி வருபவர்கள் மின்சாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் கரண்ட் ஷாக் வைத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், காவலாளியான தந்தையை ஊருக்கு அனுப்பிய பின்னர் பண்ணை வீட்டிற்குள் புகுந்து சிலர் மாங்காய் திருடுவது உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபட்டதால் இரும்பு கேட்டில் மின்சாரம் பொருத்தியதாக கிருஷ்ணா போலீசில் தெரிவித்துள்ளான்