நிலுவையில் உள்ள தேசத்துரோக வழக்குகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசத்துரோக வழக்குகளை மாநில அரசுகள்தாம் பதிவு செய்வதாகவும்,இவற்றை மறு பரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். 'நிலுவையில் உள்ள, மற்றும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் தேசத்துரோக வழக்குகளின் நிலை என்னவாகும்?’ என்பது குறித்து இன்று பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.