தென்கொரியாவின் புதிய அதிபராக கன்சர்வேட்டிவ் கட்சியின் யூன் சுக் இயோல் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த மார்ச்சில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டெமாக்ரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் - ஜே - இன் தோல்வியடைந்தார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட யூன் சுக் (Yoon suk) வெற்றி பெற்றதையடுத்து, சியோலில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அதிபருக்கான கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட அவர், தேவைப்பட்டால் வட கொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூளுரைத்தார்.