அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தொற்று எதிராக இரண்டு டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதும் அவருக்கு கொரோனா உறுதியானது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மெய்நிகர் மூலம் திட்டமிடப்பட்ட அனைத்து பணிகளையும் பிளிங்கன் மேற்கொள்வார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் பிளிங்கன் கலந்து கொள்ள மாட்டார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.