மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி, எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு தகவல் அனுப்பிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன் பெயரில் சுயவிவர புகைப்படத்துடன் கூடிய போலி வாட்ஸ் அப் கணக்கை மர்ம நபர்கள் தொடங்கி எம்.பி.க்களுக்கு தகவல்களை அனுப்பியதாகவும், சம்பந்தப்பட்ட எண்களில் இருந்து வரும் தகவல்கள், அழைப்புகளை தவிர்க்குமாறும் ஓம் பிர்லா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறினார். சம்பவம் தொடர்பாக ஒடிசா போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
இந்த 3 பேரிடம் இருந்து ஒரு கும்பல் ப்ரி ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம்கார்டுகளை வாங்கி, ஓம் பிர்லா பெயரில் போலி கணக்கை தொடங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.