சென்னையில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பேருந்தின் வருகை நேரம் மற்றும் அவை வந்துகொண்டிருக்கும் இடத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக சென்னை பஸ் என்ற புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்குள்ளும், அதன் அண்டை மாவட்டங்களுக்கும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 602 வழித்தடங்களில், 6,026 பேருந்து நிறுத்தங்கள் வழியாக பயணிக்கும் அந்த பேருந்துகளில் இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமும் 25 லட்சம் பேர் இவற்றில் பயணிப்பதால் அவர்கள் பயன்படும்படி பேருந்துகளின் வருகை நேரம், தற்போது வந்துகொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக தெரியப்படுத்தும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக்கூடிய சென்னை பஸ் என்ற அந்த செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.