இந்தியாவின் ‘P-75I’ நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் சில விதிகள் காரணமாகப் பங்கேற்க இயலவில்லை என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நேவல் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் P-75I திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தை தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களான மஸ்கான் டாக் மற்றும் லார்சன் & டூப்ரா-க்கு வழங்கியது.
நீர்மூழ்கி கப்பலை நீண்ட நேரம் நீருக்கு அடியில் வேகமாக இயக்கவைக்கும் AIP அமைப்பின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டு நிறுவனம் வழங்க வேண்டுமென ஒப்பந்தப் புள்ளியில் கோரப்பட்டுள்ளது. அத்தகைய அமைப்பை பிரான்ஸ் கடற்படை பயன்படுத்தவில்லை என்பதால், இத்திட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.