உக்ரைன் நாட்டின் மரியுபோலில் உக்ரேனிய வீரர்களுடன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வின் உதவியுடன் உருக்காலையில் இருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக, உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்ஜியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், இன்னும் பலர் அங்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்ய படைகள் மீண்டும் அங்கு தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.