இந்திய எல்லையில் யார் அத்துமீறினாலும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் போது வெறும் அறிக்கை வாயிலாக மட்டுமே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நிலைமை மாறி செயலால் பதிலடி கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்திருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதல் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பலர் கேள்வி எழுப்புவதாக சுட்டிக்காட்டிய அமித்ஷா, எப்போதுமே எதிர்தாக்குதல் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது இப்போது உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அமித்ஷா கூறினார்.