உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தூதரகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கான அமெரிக்க பிரதிநிதி கிறிஸ்டினா கிவின் தெரிவித்தார்.
ரஷ்ய படையெடுப்புக்கு 2 வாரத்திற்கு முன் லிவிவ் நகருக்கு தூதரகத்தை மற்றிய அமெரிக்கா, தொடர்ந்து போர் காரணமாக தூதரகத்தை போலந்திற்கு இடம் மாற்றியது. இந்நிலையில் பாதுகாப்பு சூழல்களை ஆராய்ந்து மீண்டும் இந்த மாத இறுதியில் கீவ்வில் தூதரகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கீவ்வில் உள்ள தங்களது தூதரகத்தை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வந்ததாக டென்மார்க் வெளியுறவு அமைச்சர் Jeppe Kofod தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்ற அவர் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.