பிரபல அமெரிக்க நடிகையும், ஐ.நா. அகதிகளுக்கான முகமையின் தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
லிவிவ் நகர வீதிகளில் ரஷ்யப் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட ஏஞ்சலினா போரால் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
வெடிகுண்டு தாக்குதல்களில் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனை சென்று பார்த்த ஏஞ்சலினா ஜோலி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். லிவிவ் நகரில் உள்ள ஒரு சிற்றூண்டி கடையில் தன்னார்வலர்களுடன் ஏஞ்சலினா கலந்துரையாடியது, குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் வழங்கியது உள்ளிட்ட வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.