மருத்துவ உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாகிஸ்தானின் எந்தவொரு மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ். அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய பிரஜையும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை எழுதவோ அல்லது வேலை தேடவோ தகுதி பெற மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.