ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திருவிழா உற்சாக கொண்டாட்டத்துடன் தொடங்கியது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்ட நிலையில், தற்போது மீண்டும் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
பியர் திருவிழாவுக்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவைத் தொடங்கி வைத்ததும் முண்டியடித்துக் கொண்டு மதுப் பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கத் துவங்கினர்.
2ஆண்டுகளுக்கு பிறகு விழா விமரிசையாக நடப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து 60 லட்சம் பேர் வரை ஒன்றுகூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.