இத்தாலியில், சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இத்தாலியின், ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை மயில் பறந்து வந்து தரையிறங்குவது பதிவாகியுள்ளது. வெள்ளை நிற மயில் உலா வருவது சுற்றுலா பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். பிறக்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வளரும் போது வெள்ளை நிறமாக மாறுகின்றன.