பிப்ரவரி 24ஆம் தேதிக்கு பிறகு உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன செய்தி நிறுவனத்திடம் கூறிய அவர், உக்ரைனில் உள்ள 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்யாவிற்கு வெளியேற்றும்படி கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆதரவு பகுதிகளான, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.