சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரைத் தொடர்ந்து பெய்ஜிங்கிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நகரில் வசிக்கும் சுமார் 2 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஷாங்காய் நகரைப் போல இங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள குவிந்தனர்.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றாலும், ஷாங்காய் நகரைப் போல பாதிப்புகள் அதிகரிக்காத வண்ணம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.